தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில், உலக முட்டை தினத்தை முன்னிட்டு இலவச முட்டை வழங்கும் விழா நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள சங்க வளாகத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கச் செயலாளர் சுந்தரராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உலக முட்டை தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது
உலக முட்டை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் 10 ஆயிரம் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் சுந்தரராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முட்டை சாப்பிடுவது குறித்த விழிப்புணர்வு
இதுகுறித்து சங்கத் தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:
உலக முட்டை தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ஆயிரம் முட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெறுவதற்கு முட்டை சிறந்த உணவாகும். குறைந்த விலையில் தரமான புரதச்சத்தை வழங்கும் உணவாக முட்டை விளங்குகிறது. பொதுமக்கள் தங்களது உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ப முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது உடல் தகுதியைப் பராமரிக்க முட்டையை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். முட்டை நுகர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அதன் பயன்பாடும் உயர்ந்து வருகிறது.
முட்டை நுகர்வு அதிகரிப்பு
இந்தியாவில் தனிநபர் முட்டை நுகர்வு முன்பு ஆண்டுக்கு சராசரியாக 70 முதல் 80 முட்டைகளாக இருந்த நிலையில், தற்போது 110 முட்டைகளைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் மாநிலங்களில் சில பகுதிகளில் தனிநபர் நுகர்வு ஆண்டுக்கு 180 முதல் 200 முட்டைகள் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. உணவகங்களில் காலை உணவின்போது முட்டை மற்றும் ஆம்லெட் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் குறித்து அச்சம் தேவையில்லை
ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கோழிப் பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றன. கோழிகளுக்குத் தவறாமல் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதுடன், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் உயிர்ப் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. எனவே, பண்ணைகளில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், நாமக்கல் மண்டலத்தில் இருந்து அதிக அளவில் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், தமிழகக் கோழிப் பண்ணைத் துறை நாட்டிற்கே முன்மாதிரியாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் கவலை
கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பண்ணையாளர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மக்காச்சோளம் கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரையிலும், சோயா கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மக்காச்சோளத்தை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி.) கிடைக்கச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கோழித் தீவனத்தை நியாயமான விலையில் தயாரிக்க முடியும். தீவன மூலப்பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்தால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
வெயிலால் முட்டை உற்பத்தி பாதிக்கும் அபாயம்
தற்போது அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தீவன மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை கோழிப் பண்ணைத் தொழிலுக்குச் சவாலாக உள்ளன. இதனால் முட்டை உற்பத்தி குறையும் அபாயம் இருப்பதாகவும், வரும் காலங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கவலை நிலவுவதாகவும் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.