நாமக்கல்லில் தவெக வெற்றியைக் கொண்டாடிய முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடுபட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகம்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாமக்கல்லில் தவெக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகே மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் திலீப் மற்றும் கட்சி முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது திமுகவின் பொய் பிரச்சாரம் அதிமுகவின் பொய் பிரச்சாரம் எதுவும் மக்களிடையே எடுபடவில்லை அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் அந்த தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகம் மிகப் பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *