பேராவூரணி அக் 10
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள மாவடுகுறிச்சி ஊராட்சியில், கிராம தணிக்கை, கிராம மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை காவல்துறை ஏ.எஸ்.பி. அங்கிதா கலந்துகொண்டு கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வருமானத்திற்கு ஏற்ற ஆலோசனைகள் வழங்சினார். நிகழ்ச்சியில் பேராவூரணி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் மனோஜ்குமார்,திமுக அவைத் தலைவர் ஆர்.நீலகண்டன், ஊராட்சி செயலாளர் நடராஜன்,மு.வீரப்பன், மு. நீலகண்டன், தங்கராசு உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் செய்திருந்தார்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .