தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான கட்சியின் பொதுச் செயலாளர் பேபி .பினராயி விஜயன், தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம்.அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி கே. பாலகிருஷ்ணன்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட தலைவர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயக உரிமைகள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்றும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒடுக்குவதற்குப் பதிலாக மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைக் கைது செய்த நடவடிக்கையைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும், போராட்ட உரிமையை மதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை நோக்கங்களுடன் தொடர்புடையது என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராகத் தூத்துக்குடியில் நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து தலைமை ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் மாவட்ட செயலாளர் கே .பி ஆறுமுகம் சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன் சகாயம்.. (சிபிஐ எம் எல் )மாநில குழு உறுப்பினர்
சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பூமியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா மாவட்ட குழு உறுப்பினர்கள் காசி.இனிதா ஒன்றிய செயலாளர் சங்கரன் மாநகரக்குழு நாகராஜ்.ஆறுமுகம்
Cpi(m) இல.இராமமூர்த்தி மனோகரன் Cpi மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்