கீ அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இயங்கி வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஆலை வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது செட்டிநாடு சிமெண்ட் ஆலை தலைவர் ஆர் பி முத்தையா தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார்

அவர் பேசுகையில் கூறியதாவது மனித உயிர் மிகவும் விலைமதிப்பற்றது சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளையும் கடுமையான தலை காயங்களையும் தவிர்க்க இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தரமான தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் மாவட்ட நிர்வாகம் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் நிலையில் நிறுவன பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்றி விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி நபரின் கடமை மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணிவது சட்டத்திற்கு பயந்து அல்ல நமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காகவே என்பதை அனைவரும் உணர வேண்டும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதை தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்

தொடர்ந்து ஆலையின் பல்வேறு துறை தலைவர்கள் முன்னிலையில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை விதிகளை மதித்து நடப்பது அதிவேகத்தை தவிர்ப்பது மற்றும் தரமான ஹெல்மெட் அணிவது முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஆலையில் அனைத்து துறை தலைவர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் பாதுகாப்பான சமுதாயத்தை இந்த ஆலை வளாகம் 100 சதவீதம் தலைக்கவசம் அணிந்து வருவதை ஒவ்வொரு நாளும் உறுதி செய்கிறது இவ்வாறு செய்தியாளர்களிடம் ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *