முடிச்சூர்: மத்திய அரசைக் கண்டித்து, முடிச்சூர் வரதராஜபுரம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் எதிர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத் தலைவர் கே.வி. ஜெமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வியாபாரிகள் பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

UPI பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான கட்டணங்கள் மற்றும் வரி விதிப்புகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான இத்தகைய கட்டண, வரி விதிப்புகள் குறித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சங்கப் பொதுச்செயலாளர் எஸ். பவுல்ராஜ், பகுதி பொருளாளர் ஜெபத்துரை, துணைத் தலைவர் ராஜ், பகுதி பொறுப்பாளர்கள் பால் வண்ணன், ஆனந்தன், தமிழன், மேஷாக், துணைச் செயலாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் சஞ்சய் பிரசாத், கௌரவ ஆலோசகர் ஜெபா ஆபிரகாம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *