துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அமமுக மாவட்ட செயலாளர் தரையில் அமர்ந்து தர்ணா-தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் அதிகாரிகள் தரக்குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு
துறையூர் அக் -13
திருச்சி மாவட்டம் துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட செயலாளர் பீரங்கி சுப்ரமணியன் பத்திரப்பதிவு சம்பந்தமாக அலுவலகத்திற்கு சென்றதாக தெரிகிறது.அங்கு உள்ளே சென்றவுடன் இருக்கையில் அமர்ந்திருந்த அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்துவது போல எழுந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள அறைக்கு சென்று விட்டதாகவும் தான் தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்தினால் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தர்ணா கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்