கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் முன்னிலையில் நேரில் ஆய்வு.

கோவை மாநகராட்சி 80-வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், அசோகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் பெருமளவு மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன் குமார், மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா மற்றும் கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட செல்வபுரம் பகுதிகளில் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த முக்கிய ஆய்வின்போது, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வி.செந்தில் பாலாஜி MLA அவர்களின் உத்தரவு படி கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் மற்றும் 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோரின் முன்னிலையில், பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் சீரமைப்புப் பணிகளை. பொது சுகாதாரக் குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் சிறப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை கழிவுநீர் உறிஞ்சி அகற்றும் வாகனங்கள் மூலம் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டி, மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். தேங்கியுள்ள நீர் முழுவதும் அகற்றப்பட்டு மக்களின் இயல்பு நிலை முழுமையாகத் திரும்பும் வரை இப்பணிகள் தொய்வின்றி துரிதமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பகுதி செயலாளர் முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *