வில்லியனூர்:

புதுச்சேரி வில்லியனூர் திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற “போதி கேம்பஸ் – ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தலைப்பிலான விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை நடைபெற்றது.

இந்தப் பேரணியில் மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும், தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும், தீய பழக்கங்களில் ஈடுபடக்கூடாது, காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வுப் பேரணியை புதுச்சேரி போக்குவரத்துத் துறை காவல் கண்காணிப்பாளர் (SP) பக்தவச்சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, பல்வேறு நல்ல அறிவுரைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமரன், சந்திரசேகரன் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் தீய பழக்கங்களைத் தவிர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இப்பேரணி அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *