கோவை பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின் நிறுவன நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்!

பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் சாரிட்டிஸ் அமைப்பின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின் நிறுவன நாள் விழா (Foundation Day 2026), பி.எஸ்.ஜி மருத்துவமனை பி-பிளாக் அரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் சாரிட்டிஸ் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன் மற்றும் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ஆர். மகேஷ் வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பெல்காம் KAHER நிறுவனங்களின் இணை மற்றும் சுகாதாரப் பிரிவு பேராசிரியரும் டீனுமான, மேலும் மத்திய அரசின் NCAHP உடலியக்க மருத்துவப் கவுன்சில் உறுப்பினருமான முனைவர் விஜய் கேஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பி.எஸ்.ஜி நிறுவனத்தின் நூற்றாண்டு கால சாதனைகளையும், அதன் தலைமையின் சிறப்புகளையும் பாராட்டியதோடு, மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடனும் சேவை மனப்பான்மையுடனும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விழாவின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் LIME PARRC, TRUALIGN மற்றும் Mindful Movement Therapies நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை பிசியோதெரபிஸ்ட்டான எஸ். ஐயப்பன் (2002 பேட்ச்) மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள ஜாஸான் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான ஆர்.எஸ். ரம்யா (2003 பேட்ச்) ஆகிய சிறந்த முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். விருது பெற்ற அவர்கள் தங்கள் கல்லூரிக் கால நினைவுகளையும், வெற்றிக்கு கல்லூரி அளித்த பங்களிப்பையும் நன்றியுடன் பகிர்ந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *