கல்பாக்கம் அக் 31
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் 17 இலட்சம் செலவில் புதிய அங்கன் வாடி மைய கட்டடம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகர் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பகவதி மேற்பார்வையாளர் புவனேஸ்வரி இலத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் வேலு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜே இராமச்சந்திரன் நைனா கண்ணு சரவணன் கூவத்தூர் அங்கன்வாடி பணியாளர் ரேவதி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைக் காவலர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்