தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 திமுக உறுப்பினர்களும், விசிக மற்றும் காங்கிரஸ் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்று, திமுகவைச் சேர்ந்த மாரி என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் மாரி, மக்களுக்கு தேவையான பகுதிகளுக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பணிகளை செய்யாமல், தான் ரியல் எஸ்டேட் செய்து வரும் இடங்களில், வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்காக சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை பேரூராட்சி நிதியிலேயே செய்து வருவதாகவும், மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்காக வைக்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிகளை செய்து வருவதாகவும், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பிறகு திமுகவில் சேர்ந்து பேரூராட்சி தலைவராகிவிட்டு, திமுக ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து, தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம், 10 மன்ற உறுப்பினர்கள் அபிடவிட் கொடுத்தனர். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானைத்தை கொண்டு வந்து தலைவரை மாற்ற வேண்டும் வலியுறுத்தினர்.