கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி மருத்துவமனை கட்டிடத்தை நோயாளர்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கடலூர் மாவட்ட நலப்பணிகள் இண இயக்குனர் ஆகியோர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ள கடிதத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பிரச்சார செயலாளர் கவிஞர் ம. ரா.சிங்காரம் கேட்டுக் கொண்டுள்ளார்,
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையின் காரணமாக, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிரில் மூன்றடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திருகரங்களால் திறந்து வைக்கப்பட்டு,கடந்த எட்டு மாத காலமாக நோயாளர்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்து வருகிறது, இதனால் நோயாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிரில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை நோயாளர்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.