தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மாநில மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1,000 கனஅடி நீர் உப்பாத்து ஓடைக்குள் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏரல் தரைப்பாலம் முழுவதும் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தரைப்பாலம் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *