வேப்பூர் நவ- 2
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா புதிய வட்டாட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்று கொண்டார்
வேப்பூர் வட்டாட்சியராக இருந்த ராமர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றபட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பறக்கும் படை தனி வட்டாட்சியராக இருந்த ரவிக்குமார் பதவி உயர்வு பெற்று வேப்பூர் தாலுகா புதிய வட்டாட்சியராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்