தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவுட்சோர்ஸ் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்புகள் மற்றும் (வேட்டி-சட்டை, சேலை) புத்தடைகளை இன்டெக் (INTACH) மற்றும் அழகிய தஞ்சை 2005 சார்பாக மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்கள்.
இந்த விழாவில் மாநகர சுகாதார அலுவலர் வீராசாமி மோகன்குமார், உதவி ஆணையர் தீன தயாளன் ஆகியோர் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி-சட்டை, சேலைகள் வழங்கினார்கள். விழா தொடக்கத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் திருமதி அஞ்சுகம் பூபதி அவர்கள் சேவையை பாராட்டி பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
தீபாவளி பரிசளிப்பு விழாவிற்கு இன் டாக் (INTACH) கயிலை மாமனி ராமநாதன், அழகிய தஞ்சை திட்ட இயக்குனர், ஆடிட்டர். ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்தனர். இவ்விழாவிற்கு பெரிதும் உறுதுணையாக மகாதேவராவ், காசிராஜா, கார்த்திக், கதிரவன், சுரேஷ் ஆகியோர் விழா சிறக்க உதவினர்.
சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 14 கோட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் தீபாவளி பரிசாக வழங்கி பிஸ்கட் மற்றும் வேட்டி சேலை சுமார் 400 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் இறுதியாக அழகிய தஞ்சை திட்ட இயக்குனர், ஆடிட்டர். ரவிச்சந்திரன் துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மது அருந்தக்கூடாது நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கினார்.