தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக பாதுகாப்பாக விழிப்புணர்வோடு கொண்டாட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஸ்ரீரங்கம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் தேசிய விருதாளரும் நடிகரும் இயக்குனருமான மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ.தாமஸ், பெட்காட் முனைவர் கார்த்தி, ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு முனைவர் சங்கர், ஆளுநர் விருதாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத் தலைவர் முனைவர் மோகன்ராம், சிவசக்தி கணேசன்,வினை செய் அறக்கட்டளை கார்த்தி, தாய் நேசம் அறக்கட்டளை ஹெப்சிசத்தியாராகினி, ராதாகிருஷ்ணன், பாஸ்கர், சந்திரசேகர் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது .
விழிப்புணர்வு பிரசுரத்தில்
அரசு நிர்ணயத்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட சரவெடி, சுற்றுசூழலை பாதிக்கும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
பாட்டில், டப்பாக்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.வெடிக்காத வெடிகளை கையில் எடுக்க கூடாது.நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி நீர் மற்றும் மணல் பக்கத்தில் வைக்க வேண்டும்.பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.பட்டாசுகளை குனிந்து கொண்டு பற்ற வைக்காதீர்கள், நீண்ட வத்திகளை உபயோகிக்க வேண்டும்.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க அனுமதிக்காதீர்கள்.பட்டாசு கொளுத்தும் போது இறுக்கமான உடைகளை அணிய வேண்டும். மேலும் காலணி [செருப்பு] அணிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் சட்டை, பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.
வான வெடிகளை குடிசைகள் இல்லாத மற்றும் வாகன போக்குவரத்து இல்லாத திறந்த வெளியில் வெடிக்க செய்யுங்கள்.
எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் ஒடாதீர்கள், தண்ணீர் ஊற்றுவது அல்லது கீழே படுத்து உருளுவது நல்லது. கண்களில் நெருப்பு காயம் பட்டால் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும். மத்தாப்புகளை கொளுத்தி கையில் வைத்து வெடிக்க கூடாது.
கம்பி மத்தாப்புகள் எரிந்து முடிந்தவுடன் நீர் வாளிக்குள் போடவும்.சாட்டை போன்ற மத்தாப்புகளை கொளுத்தி கையில் பிடித்து சுற்றக் கூடாது.இரயில் பெட்டிகளிலும், இரயில் நிலையங்களிலும் எக்காரனம் கொண்டு எளிதில் தீப்பற்றி கூடிய பொருட்கள், பெட்ரோல், டீசல், மற்றும் பட்டாசு, மத்தாப்புகள் எடுத்துச்செல்ல கூடாது.
பட்டாசு கடைகள், எரிவாயு கிடங்குகள், உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கு , மருத்துவமனை, மின்சார ட்ரான்ஸ்பார்மர், பெட்ரோல் பங்க், மார்க்கெட் ,முதியோர் வசிப்பு இட அருகில் துணிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தீ விபத்து அவசர சிகிச்சை மற்றும் உதவிகள் பெற திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் நவல்பட்டு அண்ணா நகர் லால்குடி சமயபுரம் புள்ளம்பாடி உப்பிலியபுரம் மணப்பாறை துவரங்குறிச்சி உள்ளிட்ட தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.