தேனி மாவட்டம் கூடலூர் திரு அருட் பிரகாச வள்ளலார் சத்திய தருமச்சாலை தொண்டு நிறுவனம் துவங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்று ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பதை வலியுறுத்தும் விதமாக அறுசுவை சைவ உணவு கூடலூர் நகர் அனைத்து பகுதிகளிலும் சென்று வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரபாண்டி பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலரும் சத்திய தருமச்சாலை நிர்வாக பொறுப்பாளருமான சா சா இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்