தூத்துக்குடி லைசன்ஸ் தாரா்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் தொழிலாளா்களுக்கு 2026ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் சம்பந்தமாக உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாாிகள் சங்கம் தூத்துக்குடி தொகுதி உப்பு தொழிலாளா்கள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் ஒப்பந்தம் ஏற்ப்பட்டது.


அதில் கலந்து கொண்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயரும் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவருமான ஜெகன் பொியசாமி கூறுகையில் எந்த ஓரு தொழிலை செய்தாலும் அதை முறையாக செய்ய வேண்டும். அப்போது தான் அந்த தொழிலுக்கும் மாியாதை இருக்கும் தொழிலாளா்களும் நன்றாக இருக்க முடியும் முதலீடு செய்து தொழில் செய்யும் முதலாளிகளுடன் தொழிலாளியும் எல்லா வகையிலும் இணைந்து பணியாற்றினால் தான் நல்ல வளர்ச்சி அந்த தொழிலுக்கு கிடைக்கும் இருவரும் இரண்டு கண்களை போன்றவா்கள் தீபாவளி போனஸ் ஆண்டுகளுக்கு ஓரு முறை நடைபெறும் கூட்டத்தில் ரூ11300 போனஸாக கொடுப்பது என்று ஏகமனதாக ஓப்புக்கொள்ளப்பட்டது.

அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் தூத்துக்குடியிலிருந்து தான் உப்பு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் சென்ற நிலை இருந்தது. தற்போது சில மாநிலங்களில் உற்பத்தி மூலம் நம்முடைய தொழில் சற்று குறைந்துள்ளது பழைய நிலை வர வேண்டும் இதில் என்னுடைய ஓத்துழைப்பு முழுமையாக உங்களுடன் இருப்பேன் என்று தொிவித்தாா்.


உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாாிகள் தலைவா் சடகோபன், செயலாளர் சேகா், லிங்கமணி, சங்க செயலாளர் மூா்த்தி, மற்றும் கனகராஜ், விஜி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *