திருவொற்றியூர், நவ, 6- தூய்மை பணியாளர்களுடன் ஒன்று சேர்ந்து, தவெக எம்எல்ஏ மாஸ் வொர்க்கில் ஈடுபட்டார்.
சாலையின் குப்பைகளை அகற்றி, நோய் தொற்று பொதுமக்களை பாதிக்காத வகையில், பெரும் பங்காற்றி வருவதில், பெண் தூய்மை பணியாளர்களின் பங்கு சிறப்பு வாய்ந்தவை.
இதில் அவர்களின் மாஸ் வொர்க் ஒன்று உள்ளது. ஓட்டுமொத்த பெண் தூய்மை
பணியாளர்கள் களத்தில் இறங்கி, சாலையில் உள்ள அனைத்து குப்பைகளும் அகற்றுவதே, அவர்களின் பாஷையில் மாஸ் வொர்க் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகர், சுனாமி குடியிருப்பு பகுதிகளில், பெண் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, தவெக எம்எல்ஏ செந்தில்குமார் மாஸ் வொர்க்கில் ஈடுபட்டார். கையில் துடைப்பத்தை வைத்து, குப்பைகளை சுத்தம் செய்தார்.
இந்த நிகழ்வில், மண்டல அலுவலர் சங்கர், செயற்பொறியாளர்கள் பாண்டியன், ஜெயராமன் மற்றும் மண்டல தலைமை அலுவலர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.