.
நவம்பர் 6.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகாவிற்கு உட்பட்ட திருமங்கல குறிச்சி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி இருக்கும் அதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் திருமங்கல குறிச்சி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஆகியோர் உடனடியாக கைத்தார் தாலுகாவிற்கு உட்பட்ட திருமங்கல குறிச்சி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் அதுபோல மழைக்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.