உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜையை முன்னிட்டு, தேனி மாவட்டம் வழியாக குமுளி செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தகூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார்கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ முன்னிலை வகித்தார்

உத்தமபாளையம் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசியது

சபரிமலைக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் சட்டைகள், குடிநீர், ஓய்விடங்கள், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் விபத்துகளைத் தவிர்க்க சாலைகளில் எச்சரிக்கை விளக்குகள், மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.குறிப்பாக தேனி – கம்பம் பைபாஸ் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, சாலைகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சாலைகளை விரைந்து சீரமைக்காவிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *