கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி சுகுணா வாலிபால் லீக் – 2026 எனும் தலைப்பில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இப்போட்டியை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை பேராசிரியர் டாக்டர் பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சுகுணா நிறுவனங்களின் தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி, தாளாளர் எல். சுகுணா, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி. கோவிந்தராஜலு, டீன் ரம்யா சந்தோஷ், சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் டாக்டர் ஏ. மோகனசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 16-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கைப்பந்து விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கிரெசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும், டி.ஆர்.ஜி. மெட்ரிகுலேஷன் பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சுகுணா குழுமங களின் தலைவர். எல.என்.அவர்கள் வழங்கி கவுரவித்தார் இதே போல போட்டியில் பங்கேற்ற அனைத்து பள்ளி அணிகளுக்கும் நினைவுக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம், உடல் ஆரோக்கியம், குழு ஒற்றுமை மற்றும் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இப்போட்டி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது..