கோவை பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் தங்கியுள்ள 217 குழந்தைகளுடன் இணைந்து, பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஜி மேலாண்மைக் கல்வி நிறுவன (PSGIM) மாணவர்கள் சார்பில் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் இல்லத்தில் தங்கியுள்ள மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தாடைகளைத் தேர்வு செய்து அணிந்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், சிற்றுண்டிகள் மற்றும் சிறப்பு தீபாவளி விருந்தை உண்டும் உற்சாகமாகக் கொண்டாடினர்.மேலும், PSGIM மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் இணைந்து கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்பினர், பி.எஸ்.ஜி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என ஏராளமானோர் பங்கேற்று நட்பு மற்றும் கலாசார ஒற்றுமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தக் கொண்டாட்டம், குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடன், மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு, அன்பு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்வாகவும் அமைந்தது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *