தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குண்டடம் பேருந்து நிலையம் எதிரே இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்றும், குடும்பத்துடன் வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.