மாதிரி பத்திர பதிவு மையம் துவங்க எதிர்ப்பு தெரிவித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வீரசிகாமணியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதிரி பத்திர பதிவு மையம் துவங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் தொடர்ந்து பணி புறக்கணிப்பு செய்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக வீரசிகாமணியில் மாதிரி பத்திர பதிவு மையம் துவங்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.முகமது அனீஸ், கணேசன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரோஜா வரவேற்றார். வீரசிகாமணி மற்றும் சுரண்டை வட்டார ஆவண எழுத்தாளர்கள், வழக்கறிஞர் கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் மாதிரி பத்திரப்பதிவு மையம் தொடங்குவதை கைவிட வேண்டும்,
பத்திரப்பதிவை தனியார் மயம் ஆக்குவதால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள்,பொதுமக்கள் அதிகமான தொகையை தனியாரிடம் கட்ட வேண்டிய சூழ்நிலையும், போலி பத்திரங்கள் பதிவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில், தொடர் போராட்டங்கள் தமிழக அரசை கண்டித்து நடைபெறும் என தெரிவித்தனர்.மேலும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக பத்திர பதிவை புறக்கணித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பார்த்திபன்,கார்த்திக் ராஜா, காசி சிவகுருநாதன், சுரண்டை வட்டார ஒருங்கிணைப்பு குழு தலைவர் வழக்கறிஞர் வாடியூர் அந்தோணி, சுதா, மாதவி, ராஜ்குமார், லிங்க ராஜா, சுப்பிரமணியன், ஐவராஜா, மணிகண்ட ராஜா உள்ளிட்ட வீரசிகாமணி மற்றும் சுரண்டை வட்டாரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.