தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக Dr. R. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எந்த ஒரு குற்றச்சம்பவங்களும் ஈடுபடாத வண்ணம் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
அதன் பேரில், தென்காசி மாவட்டத்தில் 08.11.2026 தீபாவளி பண்டிகை நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 850 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படாத வண்ணம் அனைத்து வழிபாட்டு நெறிமுறைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.தீபாவளியை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து பட்டாசுகள், இனிப்புகள், பரிசுகள் அல்லது பிற பொருள்கள் போன்றவற்றை பெறக்கூடாது எனவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்தார்