திருவொற்றியூர்,

நவ, 6- விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு மாற்று திறனாளர் சங்கம் மற்றும் முயற்சி கூடம் பவுண்டேசன் இணைந்து, மாபெரும் ஊர்வலம் நடந்தது. திருவொற்றியூர் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து துவங்கிய மாற்றுத்திறனாளி ஊர்வலம், எண்ணூர் காவல் நிலையம் அருகில் முடிவடைந்தது. நிகழ்ச்சியை தவெக எம்எல்ஏ செந்தில்குமார் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எண்ணூர் தீயணைப்பு அதிகாரி முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *