மதுராந்தகம் செய்தியாளர் .பிரவின்குமார்
மதுராந்தகம்,
தமிழக மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் 9 புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் புதிய பேருந்து சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
புதிய பேருந்து வழித்தடங்கள்:
- சிறுப்பெயர்பாண்டி – மதுராந்தகம்
- வேப்பங்கரணை – திண்டிவனம்
- மதுராந்தகம் – உத்திரமேரூர்
- மதுராந்தகம் – சூனாம்பேடு
- மதுராந்தகம் – செங்கல்பட்டு
- மதுராந்தகம் – ஒரத்தி
- மதுராந்தகம் – அணைக்கட்டு
- அச்சரப்பாக்கம் – சூனாம்பேடு
- தொழுப்பேடு – தாம்பரம் மெப்ஸ்
இந்த புதிய பேருந்து சேவைகள் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் பயனடைவார்கள். குறிப்பாக, கிராமப்புற மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், அன்றாடப் பயணமும் எளிதாகும்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு. வீரப்பன், இ.ஆ.ப., மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.