மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தலைச்சு மையாக தேர்களை பக்தர்கள் சுமந்து வந்தனர்.

மதுரை மாவட்டம்
பேரை யூர் அருகே டி.கல்லுப்பட்டி பகுதிகளில் 2 ஆண்டு களுக்கு ஒருமுறை ஏழு ஊர் திருவிழா எனப்படும் முத்தாலம்மன் கோவில் விழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான முத்தாலம்மன் கோவில் திருவிழா சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.

இதற்காக ஒருவாரத்திற்கும் மேலாக தேர் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. அதன்படி சுமார் 35 முதல் 40 அடி உயரத்தில் தேர்களை வடிவமைத்தனர்.திருவிழாவின் சிகரமாக தேர்களை அந்தந்த ஊர்களில் இருந்து பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து மதுரை-ராஜபாளையம் சாலையிலுள்ள அம்மாபட்டிக்கு மண்ணால் வடிவமைக்கப்பட்ட ஏழு அம்மன்களும் தலைச்சுமையாக தூக்கி வரப்பட்டது.


அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளப்பட்டது. பின் அவரவர் ஊர்களுக்கு தேர்களை மீண்டும் தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.
விழாவையொட்டி மாவிளக்கு, முளைப்பாரி, அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடந்தன. இத்திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *