தமிழக முதலமைச்சர் விஜய் மதுக்கடைகள் எல்லாம் மூடுவார் என நினைத்தோம் ஆனால் மீண்டும் மீண்டும் மது கடைகளை திறக்கிறார் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த உடன் தமிழக முழுவதும் 717 மதுபான கடைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக மது கடைகள் மூடப்பட்டது அப்போது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது இந்த நிலையில் மூடப்பட்ட மதுபான கடையில் அருகிலேயே தொடர்ந்து பல்வேறு மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் தூத்துக்குடி மாநகரில் மட்டும் இரண்டு இடத்தில் மதுபான கடைகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டையாபுரம் மெயின் ரோடு மார்ட்டினா நகர் பகுதியில் புதியதாக மதுபான கடை என்று திறப்பதற்கு வெள்ளிக்கிழமை இரவு கடையில் மதுபான பாட்டல்களை இருப்பு வைக்கப்பட்டு இருந்து சனிக்கிழமை காலை மதுக்கடைகளை திறக்க ஊழியர்கள் அங்கு வந்திருந்தனர்

இதனை அறிந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மதுபான கடையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர் உடனடியாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் டாஸ்மார்க் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காத வகையில் மதுபான கடை செயல்படும் உங்களுக்கு பாதுகாப்புக்கு காவல்துறையினர் அமர்த்த படுவார்கள் என்று காவல்துறையினர் கூறினார்கள்

ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர் இந்தப் பகுதியில் மதுபான கடை திறந்தால் குடியிருப்பு பகுதியில் மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் ஆனால் காவல்துறையினர் டாஸ்மார்க் அதிகாரிகள் கடையை திறப்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர் இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் இங்கு மதுபான கடை திறப்பதற்கு முன்பு பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தோம் இந்த இடதம் மிகவும் அமைதியான இடம் மதுபான கடை திறந்தால் நாங்கள் நிம்மதியாக இங்கு குடி இருக்க முடியாது இரவு நேரத்தில் நாங்கள் வெளியே சென்று விட்டு வர முடியாது எங்களுக்கு பாதுகாப்பு இல்லை அதிகாரிகள் மது பிரியர்கள் யாரும் இங்கு குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள்

இங்கு பொதுமக்கள் தற்போது அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர் இங்கு மது கடை திறக்க கூடாது . அமைச்சனரநேரில் சந்தித்து மனு அளித்தோம் ஆனால் இன்று மதுக்கடை திறக்க உள்ளனர் என்று கூறினார். இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் கூறுகையில் இங்கு நான்கு வருடமாக நாங்கள் குடியிருந்து வருகிறோம் இங்கு மதுக்கடை வருவதாக மூன்று மாதங்களுக்கு முன்பு தெரியவந்ததை அடுத்து நாங்கள் நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாஸ்மார்க் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தோம்

அவர்களும் மது கடை இங்கு வராது என்று கூறினார்கள் அமைச்சனர நேரில் சந்தித்து கூறினேன் அமைச்சரும் மதுக்கடை இங்கு வராது என்று கூறினார் இங்கு 400குடியிருப்புகள் உள்ளது இது சிப்காட் காவல் துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது ஒரு நாள் முழுவதும் காவல்துறையினர் இங்கு வர முடியாது ஆகையால் இங்கு மதுபான கடை வரக்கூடாது இங்கு மதுபான கடை திறந்தால் நிறைய பேருக்கு பாதிப்பு இருக்கும் எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது தமிழக வெற்றிக்கழக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுக்கடைகள் மூடியதை வரவேற்றம் ஆனால் தற்போது தொடர்ந்து மதுபான கடை திறப்பது நாங்கள் தமிழக அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டோம் நகருக்குள் இருந்த மதுபான கடைகளை மூடிவிட்டு புறநகர் பகுதியில் தொடர்ந்து மதுபான கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது தமிழக அரசு மதுபான கடைகளை திறக்க கூடாது என்று பகுதி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *