ரோடு சேதம். பொதுமக்கள் புகார். ஒப்பந்ததாரரை மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார் மேயர்ஜெகன்.


தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியான தென்பாகம் காவல் நிலையம் முதல் காமராஜ் சாலை கடைசி பகுதி வரை 2019 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது சிமெண்ட் சாலைகள் ஒவ்வொன்றும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை எந்தவிதமான சாலைகள் சேதாரம் உடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் ஆனால் போடப்பட்ட சிமெண்ட் சாலைகள் மீண்டும் சேதமடைந்ததால் 2022 ஆம் ஆண்டு மீண்டும் ஒப்பந்ததாரரை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டது போடப்பட்ட சிமெண்ட் சாலை மீண்டும் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. தமிழகத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் காமராஜ் சாலை வழியாகத்தான் திருச்செந்தூர் செல்ல முடியும் ஒரு சூழ்நிலை ரோடுகள் உடைப்பு ஏற்பட்டு இருந்ததால் வாகனங்கள் செல்ல கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்

இதனை அடுத்து உடனடியாக ஒப்பந்ததாரரை மீண்டும் சாலை அமைத்து தர வேண்டுமென மேயர் ஜெகன் உத்தரவிட்டிருந்தார் அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தென்பாகம் காவல் நிலையம் ஒட்டி உள்ள சாலை போடப்பட்டது இந்த நிலையில் மீண்டும் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள காமராஜர் சாலை மீண்டும் ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை போடப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு சுமார் 40 லட்ச ரூபாய் வரை மிச்சம் ஏற்பட்டுள்ளது

சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டார் சாலைகள் எவ்வாறு போடப்படுகிறது என்று அதிகாரிகளிடம் விபரங்களை மேற் ஜெகன் கேட்டு எறிந்தார் அதன் பிறகு செய்தியாளர்களிடம் மேயர் ஜெகன் கூறுகையில் மாநகர மக்கள் அனைவருக்கும் மாநகராட்சி மேயர் என்ற முறையில் நான் (மேயர் ஜெகன்) தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது சாலை உடைப்பு ஏற்பட்டதால் முன்னாள் தமிழக முதலமைச்சர் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோர் உத்தரவின் பேரில் 2022 ஆம் ஆண்டு மீண்டும் சாலை போடப்பட்டது அதன் பிறகும் சாலை உடைப்பு ஏற்பட்டது 15 ஆண்டு காலம் சாலை சரியாக இருக்க வேண்டும் ஆகையால் மீண்டும் ஒப்பந்ததாரரை சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தேன் அதன் அடிப்படையில் காமராஜ் சாலை முழுவதும் இன்று தார் சாலை அமைக்கப்படுகிறது

இந்த சாலை வழியாகத்தான் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகள் தமிழகத்தில் இருந்து திருச்செந்தூர் வரும் அனைத்து பேருந்துகள் வாகனங்கள் இந்த காமராஜ் சாலை வழியாகத்தான் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக இரண்டு தினங்களில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடங்க உள்ளது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தில் இருந்து பல லட்சம் பேர் கந்த சஷ்டியின் முக்கிய திருவிழாவான சூரசம்காரம் காண மக்கள் வருவார்கள்

ஆகையால் உடனடியாக இந்த காமராஜ் சாலை முழுவதும் போடப்பட்டுள்ளது பணிகள் இன்று முடிந்து விடும் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு காமராஜ் சாலை வரும் என்று மேயர் ஜெகன் தெரிவித்தார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன். மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன்.. முத்துமாரி. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா. திமுக நிர்வாகி ஜேஸ்பார். உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *