அரியலூர்: நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, குழந்தைகள் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளின் ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மல்லிகா, அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால், கோட்டாட்சியர் பிரேமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், மாவட்டக் கல்வி ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.