ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட நேருஜி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.