கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் 183 பயனாளிகளுக்கு ரூ.4,80,49,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்….
சி.முட்லூரில் விடுதி திறப்பு (16.11.2026) இன்று ரூ.3.96 கோடியில் 100 மாணவிகள் தங்கும் 25 அறைகள், உணவுக்கூடம், சமையலறை உள்ளிட்ட வசதிகளுடன் சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதி திறப்பு.

ஒதுக்கீடுகள் சொரக்கல்பட்டு சிஎஸ்ஐ தேவாலய புனரமைப்புக்கு ரூ.43 லட்சம், பி.முட்லூர் கபர்ஸ்தான் சுற்றுச்சுவர், சாலைக்கு ரூ.15.66 லட்சம், டாம்கோ கடன், மகளிர் சங்க உதவிகள் உள்ளிட்டவை.

புதிய அறிவிப்புகள்
9,10-ம் வகுப்பு மாணவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, தேவாலய புனரமைப்புக்கு ரூ.10 கோடி, 10 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி, வக்பு மானியம் ரூ.5 கோடியாக உயர்வு, பரங்கிப்பேட்டையில் ரூ.2 கோடியில் சமூகநலக் கூடம்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிஷன் குமார், சிதம்பரம் சிவராஜ் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் தமிழ்கனி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *