தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடியில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் நலச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை பொம்மிடியில் உள்ள MFR பலூன் திரையரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

  1. சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கி திரைப்படத் துறையினரைக் கௌரவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
  2. சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை வரும் ஜனவரி 2027-ல் பொம்மிடியில் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
  3. குறும்படப் போட்டி நடத்தி, சிறந்த குறும்படத்தைத் தேர்வு செய்து, வெற்றி பெறும் படக்குழுவினரைப் பாராட்டுவதுடன், அக்குறும்படத்தை முழுநீளத் திரைப்படமாக உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.
  4. வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டை ரூ.25 கட்டணத்தில் வழங்கவும், 2027-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் அட்டைகளைப் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
  5. சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், “ஒற்றுமையே நமது பலம்! உழைப்பே நமது அடையாளம்! அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பதே நமது இலக்கு” என்ற நோக்கத்துடன் சங்கத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் க. தனசேகர், பொதுச்செயலாளர் டாக்டர் எம்.எப். ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் ஏ. மதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஐந்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *