மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் டாக்டர் மணிவண்ணன் மற்றும் திருமதி டாக்டர் பிரபா சாமிராஜ் தம்பதியரின் மகன் இரா. ம. வெங்கட் ராம்ராஜ் அவர்களுக்கும், சென்னை ஆவடியைச் சேர்ந்த சுந்தரராஜன் மற்றும் டாக்டர் ராஜலட்சுமி தம்பதியரின் மகள் வழிப் பேத்தியும், பொறியாளர் சரவணகுமார் மற்றும் டாக்டர் சுகந்தி சரவணகுமார் தம்பதியரின் மகளுமான டாக்டர் ச. ராஜலட்சுமி அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமண விழா 16.11.2026 திங்கட்கிழமை மதுரை துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் பெரியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரையுலகப் பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.