குஜராத் மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
புதுச்சேரி விமான நிலையத்தில் அவருக்கு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் , புதுச்சேரி அரசின் அரசு செயலர் ராஜீவா சுக்லா, செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் டி. சுதாகர் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநில துணை முதலமைச்சர் ஆரோவில் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அங்கு மாத்ரி மந்திர் மற்றும் ஸ்வரம் ஒலித் தோட்டம் ஆகியவற்றைப் பார்வையிடுவதுடன், ஆரோவில்லில் நடைபெறும் சந்திப்பிலும் பங்கேற்கிறார்.