திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடந்தது. 24-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலானது முருகப்பெருமானின் முதற்படை வீடாக விளங் குகிறது. இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


உற்சவர் சன்னதியில் தெய் வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது.பின்னர் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுத்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள் முன்னிலையில் அபிஷேகம் நடந்தது.இதனையடுத்து கொடிமரத்துக்கு பால் பன்னீர், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட் டது. தொடர்ந்து கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
வண்ண மலர்களான 4 பூமாலைகள் கொடிமரம் உயரத்திற்கு தோரணமாகதொங்கவிடப்பட் டன. இதனையடுத்து கொடிம ரம், சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. அப்போது

அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியில் கோவில் அறஙகாவலர் செல்வி, கோவில் சூப்பிரண்டு ரஞ்சனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


திருவிழாவை யொட்டி காலை, இரவில் வெவ்வேறு வாகனங்களில் தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய |சுவாமி எழுந்தருளி நகர் உலா / வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வருகிற 23-ந் தேதி (திங்கட்கி ழமை) இரவு 7.25 மணி முதல் 7.50 மணிக்குள் கோவிலுக்குள் உள்ள ஆறுகால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபி ஷேகம் நடக்கிறது.


சிகர நிகழ்ச்சியாக மறுநாள் (24-ந்தேதி) மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பாலதீபம் ஏற் றப்படுகிறது. இதே நேரத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இத னையடுத்து 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்துதல் நடக்கிறது. 25-ந் தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *