செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என தமிழக செயற்கை நுண்ணறிவு,தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் ஆர்.குமார் வலியுறுத்தல்

கோவை இரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில், ‘தி யூத் டாக் தமிழ்நாடு – 2026’ இளம் தலைவர்கள் உச்சிமாநாடு மற்றும் மாநில அளவிலான இறுதிப் போட்டி நடைபெற்றது.

ஐசிடி அகாடமி மத்திய மற்றும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைகளுடன் இணைந்து நடைபெற்ற இதில், தமிழகம் முழுவதும் 425 கல்லூரிகளில் இருந்து 28,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட 67 கல்லூரிகளைச் சேர்ந்த 3,100 மாணவர்கள் மற்றும் 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இரத்தினம் குளோபல் நிகர் நிலை பல்கலை கழகத்தின் வேந்தர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற,நிகழ்ச்சியில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.குமார் கலந்து கொண்டு,பேசினார்..

அப்போது பேசிய அவர், எதிர்காலத் தமிழ்நாட்டை வடிவமைக்கப் போகும் இளம் தலைவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும் என்றார்.தமிழ்நாட்டை தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக உயர்த்தும் நோக்கில் வலுவான கொள்கைகள், நவீன டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வெறும் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தாமல், சமூக வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு மாணவர்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை கைப்பேசி வாயிலாகப் பெறும் வகையில் ‘வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி’ மற்றும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதிச் சுற்றில் பல்வேறு மண்டலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக டோரத்தி பட குழுவினர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர்கள் ரிஷி காந்த்,சனந்த் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது…

இதில்,ஐசிடி அகாடமி தலைமை செயல் அதிக டாக்டர் ஸ்ரீகாந்த் இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவரும் செயல்பாட்டு முதன்மை அதிகாரியுமான மாணிக்கம் புனேவில் உள்ள தெற்கு கட்டளை தலைமையகத்தின் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *