மதுரை: இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், முன்னாள் பிரதமருமான அமரர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ. விக்டர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மண்டலத் தலைவர்கள் எம். அஷ்டலட்சுமி, வி. குரூபிரசாத் ஆகியோர் இணைந்து இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த இந்திரா காந்தி அவர்களின் தியாகம், துணிச்சல் மற்றும் நாட்டிற்காக ஆற்றிய பணிகளை இந்நிகழ்வில் நினைவுகூர்ந்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் இந்திரா காந்தி அவர்களின் மக்கள் நலப் பணிகளைப் போற்றும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது.