தென்காசி: தென்காசி மாவட்டம், இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டி.எஸ். டேனியல் ராஜம்மாள் பி.எட். கல்லூரியில், பாரத சாரணர் இயக்கம் சார்பில் தென்காசி கல்வி மாவட்ட சாரணிய மாணவிகளுக்கான இராஜ்யபுரஷ்கார் தேர்வு முன்னோடிப் பயிற்சி முகாம் 2026–2027 ஆம் ஆண்டிற்கான திருத்திய சோபன் இரண்டாம் கட்டப் பயிற்சியாக நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமிற்கு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தென்காசி மாவட்ட ஆணையர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பொறுப்பு ஷீலா நவரோஸ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் நேரு ராஜா வரவேற்றார். கல்லூரித் தாளாளர் ராஜகுமார் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் பயிற்சி ஆணையர்கள் நடராஜன், திரேஸ் விஜயராணி உள்ளிட்டோர் மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் ஒரு பகுதியாக, சாரணிய மாணவிகள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பண்பாட்டுச் சிறப்பை வலியுறுத்தி அணிவகுப்பு நடத்தினர்.
நிகழ்ச்சியில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாவட்டப் பொருளாளர் துரை நன்றி கூறினார். ஆசிரியர்கள் ஆறுமுகசாமி, விஜயா, கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.