திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் நீதிபதி ஆணையத்தின் வழிகாட்டுதல் படி ஏ.ராஜேந்திரன்,எம்.லட்சுமணன்,ஏ. மனோகரன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் விண்ணப்பப் படிவம் வழங்கினர். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பப் படிவத்தில் வழக்கறிஞர்களின் பெயர், தந்தையின் பெயர், திருமண நிலை, பிறந்த தேதி, வயது, நிரந்தர முகவரி, அலுவலக முகவரி, சமீபத்திய வழக்கறிஞர் கழுத்துப்பட்டை அணிந்த புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.


மேலும், வழக்கறிஞர் பதிவுச் சான்றிதழ் எண் மற்றும் தேதி, TBA எண், அலைபேசி எண், கல்வித் தகுதி, பயிற்சி பெற்ற இடம், சுயமாக வழக்கறிஞர் தொழில் செய்கிறாரா அல்லது மூத்த வழக்கறிஞரின் அலுவலகத்தில் இணைந்து பணியாற்றுகிறாரா என்ற விவரங்களும் கோரப்பட்டுள்ளன. மூத்த வழக்கறிஞரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் அதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள் சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுவதாக உறுதியளிக்க வேண்டும்.


மகளிர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தற்காலிகக் குழு உறுப்பினர்கள் சார்பில் இந்த விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கை மூலம் மகளிர் வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து சங்கத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு
தேர்தல் நடைபெறவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *