அரியலூர் பி.என்.எம் திருமகள் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய திருக்குறள் திருவிழா பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி உலக திருக்குறள் கூட்டமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் நாகமுத்து தலைமையில் நடைபெற்றது.
இதில் அரியலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை 1500 மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறளை ஒப்புவித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்தினர் .
மாநில பொருளாளர் நல்லாசிரியர் சௌந்தர்ராஜன் அறிமுக உரையாற்றினார் தலைமை நிலைய செயலாளர் சின்னதுரை நோக்க உரையாற்றினார்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் கவிஞானி ஞானமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நூல் திருக்குறள்இந்த நூலை உங்கள் குழந்தைகள் நன்றாக கற்க வேண்டும். அலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்து உங்கள் குழந்தைகளுக்கு திருக்குறளை சொல்லி அவர்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினராக அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சாலை ராம் சக்திவேல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார..
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலர் கதிர் கணேசன் வரவேற்றார் .
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆதின பரம்பரை தர்மகர்த்தா வெங்கடாஜலபதி
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் தியாகராஜன் சிவராமன் தலைமைத்துறை இயக்குனர் செல்வேந்திரன் ஆசிரியர் நல்லப்பன் தமிழரிமா சம்பத் தஞ்சை அன்பழகன் கடலூர் சீனி பழமலை
தோழர் அறிவு.
தமிழ் களம் இளவரசன் செவ்வேள். சக்திவேல் கவிச்சுடர் செவ்வந்தி மங்கையர்க்கரசி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் நஸ்ரத் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.
நிறைவாக அரியலூர் மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் கவிமுரசு ராஜாராம் நன்றி கூறினார்