சுரண்டை தென்காசி மாவட்டம் பங்களாச்சுரண்டை சிஎஸ்ஐ தூய திருத்துவ ஆலயத்தில் திருநெல்வேலி திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் வடக்கு சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வடக்கு சபை மன்ற தலைவர் அருள்திரு ஜெபரத்தினம் தலைமை வகித்தார் பங்களாச்சுரண்டை சேகர தலைவர் கென்னடி முன்னிலை வகித்தார் ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குனர் ஜான்சன் வரவேற்றார் சபை மன்றத்தின் 21 சேகரங்களில் இருந்து ஆண்கள் ஐக்கிய சங்க பாடகர் குழுவினர் பாடல்கள் பாடினர்
ஆண்கள் ஐக்கிய சங்க செயலாளர் மத்தேயு நன்றி கூறினார் சேகர குருக்கள் மற்றும் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் லார்டுவின், இலஞ்சி பிஎட் கல்லூரி தாளாளர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கொண்டனர்