பொள்ளாச்சி
நவம்பர் 23
பொள்ளாச்சி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள், மிராக்கிள் இன்டக்கிரேடெட் ஹெல்த் சென்டர், கோவை தடகள சங்கம் சார்பில், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, புற்றுநோயாளிகளுக்கான நிவாரண நிதி சேகரிப்பு முயற்சியாக மனிதநேய மராத்தான் போட்டியை பொள்ளாச்சி எம்எல்ஏ நித்தியானந்தன், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். ஹரிஹரசுதன், பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் அனுஷா ரவி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் மருத்துவர் பிரதீப் கூறும்போது, புற்றுநோய் விழிப்புணர்வும். சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நிதி உதவியும் வழங்கும் நோக்கத்துடன்,சமூக ஒற்றுமை,உத்வேகம்,மனித நேயத்தை உயர்த்தும் விதமாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. இந்த மராத்தான் ஓட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் 10 கி.மீ. பிரிவிலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்,சிறுமியர்,5 கி.மீ.,பிரிவிலும்; 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 5 கிலோமீட்டர் பிரிவிலும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்,இரண்டு கி.மீ.பிரிவிலும் பங்கேற்றனர்.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் 10 கி.மீ., பிரிவில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வரை சென்று மீண்டும் போட்டி தொடங்கிய இடத்தில் நிறைவு செய்தனர்., 5 கி.மீ., பிரிவில் கல்லூரி வளாகத்தில் தொடங்கி மரப்பேட்டை வரை சென்று மீண்டும் போட்டி தொடங்கிய இடத்தில் நிறைவு செய்தனர்.
கல்லூரி மைதானத்தில் 2 கி.மீ., போட்டி நடந்தது. சுமார் 400 தன்னார்வலர்கள் போட்டியை ஒருங்கிணைத்தனர்.கடந்த 2025 ஆம் ஆண்டு மிராக்கிள் மாரத்தான் மூலம் ரூபாய் 44 லட்சம் அனைவருடைய பங்களிப்பாக பெறப்பட்டது.
அத்தொகையில் இது வரை புற்று நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு ரூபாய் 41.50 லட்சம் சிகிச்சைக்காக செலவிடப்பட்டுள்ளது. புற்றுநோயால் போராடும் நோயாளிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சிறப்பு மாரத்தான் நடத்தப்பட்டதால், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து போட்டியில் பங்கேற்று தங்களது பயண தூரத்தை, கடந்து முடித்தனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன