கடலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள், உரிய காலத்தில் பயிர் காப்பீடு, மழைநீர் சேமிப்பு, விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்ல சாலை வசதி, பருவமழை குறைவால் வறட்சி நிவாரணம், சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்துதல், பட்டா, சிட்டா விரைவாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
ஆட்சியர் பேசுகையில், மாவட்டத்தில் மொத்தம் 26,778 மெட்ரிக் டன் உர இருப்பு உள்ளது. கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 142 மனுக்களில் 128-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விதை நெல், உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், ஏரி, குளங்களில் மழைநீரை தேக்கவும், வாய்க்கால்களை தூர்வாரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கதிரேசன்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களின் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.