யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பாக வீடு, வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ கண்காட்சி
28 மற்றும் 29 என இரண்டு நாட்கள் கொடிசியா அரங்கில் நடைபெறும் இதில், வீடு, வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகள் என முன்னனி நிறுவனங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பு
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நடத்தும் ‘முகவரி எனும் வீடு மற்றும் வீட்டுக்கடன் கண்காட்சி மற்றும் ‘நலம்’ எனும் – மருத்துவ கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் துவங்கியது்
நவம்பர் 28,29 என இரண்டு நாட்கள் நடைபெறும் இதற்கான துவக்க விழாவில் பிரபல திரைப்பட ழடிகை ஜனனி பங்கேற்றார் இந்த கண்காட்சியில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வீடு மற்றும் வீட்டு மனை வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் சிறப்பு வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குகிறது. மேலும், குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன்களையும் வழங்குகிறது. தகுந்த ஆவணங்களுடன் கண்காட்சிக்கு வருகை தருபவர்கள் உடனடி வீட்டுக் கடன் ஒப்புதல் பெறலாம்.
இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வி.ஜி. ஈவன்ட் மேனேஜ்மென்ட் மற்றும் விளம்பர நிறுவனம் செய்து வருகிறது.
இக்கண்காட்சியில் முன்னணி பில்டர்கள் கலந்து கொண்டு அபார்ட்மென்ட்டுகள், தனி வீடுகள், பண்ணை வீடுகள், வீட்டு மனைகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட புராஜெக்டுகளை காட்சிப்படுத்தி உள்ளனர்..
மேலும் வி.ஜி.விளம்பர நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைந்து முன்னணி மருத்துவமனைகள் பங்கேற்கும் பிரத்தியேக மருத்துவக் கண்காட்சியும் இதே அரங்கில் நடத்தப்படுகிறது
தலை முதல் கால் வரையிலான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வுகளை காண முன்னனி மருத்துவமனைகள் தங்கள் அரங்குகளை அமைத்துள ளனர்….
இக்கண்காட்சியினை சிறப்பான முறையில் பயன்படுத்தி வீடு, வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.