அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் கோவை சுகுணா பொறியியல் கல்லூரி ஆகியோர் இணைந்து, , பள்ளி மாணவர்களின் புதுமையான சிந்தனை, அறிவியல் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ‘புத்துளிர் 3.0’ (TN School Innovation & Ideation Challenge) போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மண்டல அளவிலான தேர்வுப் போட்டி கோவையில் உள்ள சுகுணா தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது புதுமையான படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு சுகுணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மகுடீஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். சுகுணா கல்விக் குழுமங்களின் தலைவர் வி. லட்சுமி நாராயணசாமி மற்றும் பிரசிடெண்ட் எல். சுகுணா ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் மஹாலட்சுமி கலந்து கொண்டார்.கவுரவ அழைப்பாளராக சுகுணா பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் சிவக்குமார் பங்கேற்றார்.

மேலும் துவக்க விழாவில் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன்,இயக்குனர் கிருஷ்ணகுமார்,மற்றும் மோகன் ரங்கம் கதிரேசன்,ஜோயல் ஜேசு ராய் உட்பட கல்லூரி துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை நடுவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தி, அவற்றின் செயல்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் அவற்றை உருவாக்குவதற்கான நோக்கம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்ட நடுவர்கள், அவற்றின் புதுமைத்தன்மை, பயன்பாடு, செயல்படும் விதம் மற்றும் சமூகத்திற்குப் பயனளிக்கும் அம்சங்கள் குறித்து மதிப்பீடு செய்தனர்.

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் புதுமையான சிந்தனை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வம், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றை வளர்ப்பதுடன், எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாகுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதே இப்போட்டியின் முக்கிய நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *