தமிழக அரசின் உத்தரவுப் படி மேட்டுப்பாளையம் நகர் மன்றத்திற்கான மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவி ஏற்பு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அருள் வடிவு முன்னிலை வகித்தார் நகராட்சி ஆணையர் இரா .அமுதா மாற்றுத்திறனாளி ஷேக் பரீத்துல்லா என்பவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நியமன உறுப்பினர் ஷேக் பரீத்துல்லா ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் முடிவில் அனைவரும் இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *